ரயில் நேரம் மாற்றம்; மெட்ரோ டிக்கெட் இலவசம் - மக்களே முக்கிய அறிவிப்பு!

Chennai Indian Cricket Team England Cricket Team Railways
By Sumathi Jan 23, 2025 09:45 AM GMT
Report

கிரிக்கெட் போட்டியையொட்டி மெட்ரோவை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

கிரிக்கெட் போட்டி

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. வரும் 25-ம் தேதி தொடங்கும் இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

t20 match

இந்த கிரிக்கெட் போட்டியையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவையை, ரசிகர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த முறை கப் நமக்குதான்; ஆர்சிபி ஜெர்சியை புனித நீரில் நனைத்த ரசிகர் - வீடியோ வைரல்

இந்த முறை கப் நமக்குதான்; ஆர்சிபி ஜெர்சியை புனித நீரில் நனைத்த ரசிகர் - வீடியோ வைரல்

மெட்ரோ இலவசம்

அதன்படி, போட்டியை காண்பதற்கு டிக்கெட் வைத்திருப்பவர்கள் அனைவரும் போட்டியின் தினத்தில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

metro service

மேலும், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில் 10 மணிக்கும், இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரயில் 10.30 மணிக்கும் மாற்றப்பட்டுள்ளது.

வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சேப்பாக்கத்தில் 10 நிமிடம் நிற்கும் (10.27 PM - 10.37 PM) என அறிவிப்பு வெளியாகியுள்ளது.