உலகின் மிகச்சிறந்த வீரர் அவர்தான் - பாராட்டி தள்ளிய கன்குலி!

Rohit Sharma Sourav Ganguly Virat Kohli Indian Cricket Team
By Sumathi Jan 21, 2025 09:30 AM GMT
Report

உலகின் மிகச்சிறந்த வெள்ளைப் பந்து வீரராக கோலி இருப்பதாக கங்குலி பாராட்டியுள்ளார்.

கங்குலி பாராட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற பிப்.19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும். மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளன.

ganguly - virat kohli

இந்நிலையில், மேற்கு வங்க கிரிக்கெட் வாரியம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய அணிக் கேப்டன் கங்குலி கலந்துக்கொண்டார். அதில் பேசிய அவர், "விராட் கோலி வாழ்நாள் சாதனை படைத்த சிறந்த வீரர். 81 சதங்களை அடிப்பது என்பது நம்பமுடியாத ஒன்று.

அவர் உலகின் மிகச் சிறந்த வெள்ளைப் பந்து வீரர். ஒவ்வொரு வீரருக்கும் பலமும் பலவீனமும் இருக்கும். சிறந்த பந்துவீச்சாளர்களுடன் விளையாடும்போது உங்கள் பலவீனங்களுக்கு ஏற்ப நீங்கள் எவ்வாறு மாறுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். இந்திய சூழலில் நிறைய ரன்கள் கோலி எடுப்பார்.

கேப்டனாகும் ரிஷப் பண்ட்; தோனி, ராகுல் வரிசையில் சிக்கல் - வெடிக்கப்போகும் மோதல்!

கேப்டனாகும் ரிஷப் பண்ட்; தோனி, ராகுல் வரிசையில் சிக்கல் - வெடிக்கப்போகும் மோதல்!

விராட் கோலி

இன்னும் அவரின் கிரிக்கெட் பயணம் மீதமுள்ளது என்று நான் நினைக்கிறேன். இங்கிலாந்து சுற்றுப்பயணம் அவருக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபி பற்றி எந்த கவலையும் இல்லை. உலகின் மிகச் சிறந்த வெள்ளைப் பந்து வீரராக கோலி இருக்கிறார்.

உலகின் மிகச்சிறந்த வீரர் அவர்தான் - பாராட்டி தள்ளிய கன்குலி! | Saurav Ganguly Appreciate Virat Kohli Form

ஆஸ்திரேலிய பயணத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்று தெரியும். ஆனால், கடைசி இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில், டி20 இல் தோல்வியே பெறாமல் வென்றது. ஒருநாள் கோப்பையில் இறுதிப் போட்டியில் மட்டுமே இந்தியா தோற்றது. இந்திய அணி சிறந்த வெள்ளை பந்து அணியாக இருக்கின்றது.

என்னைப் பொறுத்தவரை சாம்பியன்ஸ் டிராபியின் சிறந்த அணி இந்தியாதான். ரோஹித் சர்மா அற்புதமான வெள்ளை பந்து வீரர். சாம்பியன்ஸ் டிராபி தொடங்கியதும் நீங்கள் வித்தியாசமான ரோஹித்தை பார்ப்பீர்கள். முகமது ஷமியின் உடல்தகுதி மகிழ்ச்சி அளிக்கிறது. பும்ராவுக்கு அடுத்து நாட்டின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக ஷமி உள்ளார்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடுவதால், அவர் கொஞ்சம் பதட்டமாக இருப்பார் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் வங்காள அணிக்காக நிறைய பந்துகள் வீசினார், இது வரவிருக்கும் போட்டிகளில் அவருக்கு உதவும்" எனத் தெரிவித்துள்ளார்.