சாம்பியன்ஸ் டிராபி 2025; கோலி கிடையாது - பதிலுக்கு இந்த வீரரா?
சாம்பியன்ஸ் டிராபியில் கோலி விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறுகிறது.
சமீப காலங்களில் இந்திய அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோலிக்கு காயம்
இதனால் அவர் ஜன. 23ஆம் தேதி தொடங்க இருக்கும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் தற்போது முழு உடற்தகுதியுடன் இல்லையெனில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதும் கேள்விக்குறியாகியுள்ளது.
அவருக்கு பதில் கருண் நாயரை தேர்வு செய்து நம்பர் 3இல் விளையாட வைக்க வேண்டும். துபாய் ஆடுகளங்கள் இவரது பேட்டிங் பாணிக்கு அருமையாக உதவும். உள்ளூர் விஜய் ஹசாரே 2025 தொடரில் 7 இன்னிங்ஸில் 752 ரன்களை குவித்துள்ளார்.
நல்ல பார்மில் இருக்கும் கருண் நாயர் நம்பர் 3இல் சிறப்பாக விளையாடுவது நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.