த.வெ.க முதல் மாநில மாநாடு - ஆசையாக சென்ற இளைஞர் உயிரிழந்த சோகம்!

Crime Viluppuram Thamizhaga Vetri Kazhagam
By Vidhya Senthil Oct 27, 2024 03:34 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

விஜயின் முதல் அரசியல் மாநில மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட தொண்டர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தவெக மாநாடு

விக்கிரவாண்டி மாவட்டம் வி.சாலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற உள்ளது. இதற்காகப் பிரம்மாண்ட ஏற்பாடுகள் விக்கிரவாண்டியில் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டுக்கு மாலை 3.15 மணி முதல் 4 மணிக்குள் நடிகர் விஜய் வருகிறார்.

tvk confrence

அங்கு அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயரக் கொடிக்கம்பத்தில் நடிகர் விஜய் ரிமோட் மூலம் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறார். அதன்பிறகு மாநாடு தொடங்க உள்ளது. மாலை 6 மணியளவில் நடிகர் விஜய் மாநாட்டில் பேசி கட்சிக் கொள்கைகளை அறிவிக்க உள்ளார்.

தவெக மாநாடு..விஜய் என்ன சொல்லப்போகிறார்? எதிர்பார்ப்பில் தமிழ்நாடு அரசியல் களம்!

தவெக மாநாடு..விஜய் என்ன சொல்லப்போகிறார்? எதிர்பார்ப்பில் தமிழ்நாடு அரசியல் களம்!

இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்குப் புறப்பட்ட தொண்டர்கள் விபத்தில் சிக்கி உள்ளனர். அதாவது சென்னையிலிருந்து 2 தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் விக்கிரவாண்டி நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகள் இருந்தது.

 இளைஞர் உயிரிழப்பு 

இந்த இருசக்கர வாகனம் சென்னை அண்ணா சாலையில் டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையம் அருகே லாரி மீது பைக் மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனங்களிலிருந்து 2 தொண்டர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் இன்னொருவரும் படுகாயமடைந்தார்.

accident

இதையடுத்து அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்தவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி போக்குவரத்து போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.