பாதையில் ஏற்பட்ட பிரச்சனை.. இளைஞரை ஓட ஓட வெட்டி கொலை செய்த கொடூரம்!

Crime Salem Murder
By Vidhya Senthil Oct 27, 2024 02:35 AM GMT
Report

  பொதுப்பாதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத் தொடர்பான தகராற்றில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் 

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு 3 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் பாதையை பயன்படுத்துவது தொடர்பாகப் பிரச்சனை இருந்துள்ளது.

murder

 இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முருகன் நிலத்தை ஒட்டிய பொதுப்பாதையில் மரக்கன்றுகளை வைத்ததாக கூறபடுகிறது .

நாயை கட்டிவைத்து அடித்து கொன்ற கொடூரம் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

நாயை கட்டிவைத்து அடித்து கொன்ற கொடூரம் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

பொழுதும் வாகனங்களைக் கொண்டு செல்லும் பொழுது இடையூறு ஏற்பட்டுள்ளது . இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி முருகனைத் தாக்கியுள்ளார்.

வெட்டி கொலை 

இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த காவல்துறை இறந்த இளைஞர் முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வெட்டி கொலை

தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையானது நடைபெற்ற நிலையில் இளைஞரைக் கொலை செய்த சுப்பிரமணியனை காவல்துறை கைது செய்துள்ளனர். பொதுப்பாதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டி பகலிலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.