ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; ஸ்லீப்பர் செல்லாக இருவர் தொடர்பா? வழக்கில் நடந்த ட்விஸ்ட்!
ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்ட இருவர் செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் கஃபே
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள பிரபல உணவகமான ‘ராமேஸ்வரம் கஃபே' இயங்கி வருகிறது. மதிய வேளையில், வழக்கம் போல் செயல்பட்டு கொண்டு இருந்த உணவகத்தில் திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியது.
இதில் 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பெங்களூரு போலீஸார், தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கில் நடந்த ட்விஸ்ட்
இந்நிலையில், இந்த வழக்கில் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்ட இரண்டு பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதில், முக்கிய குற்றவாளிகளான முசாவீர் மற்றும் அப்துல் மதீன் தஹ்யா ஆகியோர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப ஆதாரங்களின் பின்னணியில், அவர்களுடன் சேர்ந்து ஸ்லீப்பர் செல்லாக வேலை பார்த்திருக்கலாம் எனவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பெங்களூரில் தங்குமிடம் மற்றும் பல வசதிகள் செய்து கொடுத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.