குளியல் அறையில் இறந்து கிடந்த 2 சகோதரிகள் - பரபரப்பு பின்னணி!
இரு சகோதரிகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்பன் மோனாக்சைடு
மைசூர், பிரியாபட்டினத்தின் ஜோனிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அல்தாப் பாஷா. இவருக்கு 4 மகள்கள். 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.

குல்பம் தாஜ் (23), சிம்ரன் தாஜ் (21) ஆகிய இரு மகள்கள் மற்றும் மனைவியுடன் அல்தாப் வசித்து வந்தார். இந்நிலையில், மகளான குல்பம் தாஜுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தொடர்ந்து திருமணத்தையொட்டி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சகோதரிகள் பலி
அந்த விழாவுக்கு மணமகன் வீட்டாரும் வந்திருந்தனர். இதையடுத்து அந்த சடங்கு முடிந்ததும் இரு சகோதரிகளும் ஒன்றாக குளிக்கச் சென்றனர். பின் இருவரும் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சகோதரிகளின் பெற்றோர், உறவினர் எல்லாம் கதவை தட்டி பார்த்தனர்.

எந்த சத்தமும் இல்லாததால், கதவை உடைத்து பார்த்த போது இருவரும் மயங்கிக் கிடந்தனர். உடனே, மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
அதில், குளியல் அறையில் இருந்த ஹீட்டரில் இருந்து கார்பன் மோனாக்சைடு கசிந்துள்ளது. இதை இருவரும் சுவாசித்ததால் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்துள்ளது.