படிக்கச் சொன்ன தாயை தாலியால் துடிக்கத் துடிக்கக் கொலை செய்த சிறுவன் - பகீர் பின்னணி

Crime Kallakurichi
By Sumathi Oct 25, 2025 10:57 AM GMT
Report

தாயை கழுத்தை நெரித்துக்கொலை செய்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

படிக்க சொன்ன தாய்

கள்ளக்குறிச்சி, கீழக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (45). இவரது மனைவி மகேஸ்வரி (40). இந்த தம்பதிக்கு 16 மற்றும் 14 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

மகேஸ்வரி

இதில் இரண்டாவது மகன் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி தீபாவளியன்று, மகேஸ்வரி தான் வளர்த்து வரும் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக விவசாய நிலத்திற்கு சென்றதாக தெரிகிறது. ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து தேடியுள்ளனர்.

அப்போது, பன்னீர்செல்வம் என்பவரின் விவசாய நிலத்தில் மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியை கொன்று டிரம்மில் அடைத்துவிட்டு.. மட்டன் குழம்புடன் கொண்டாடிய கணவன்!

மனைவியை கொன்று டிரம்மில் அடைத்துவிட்டு.. மட்டன் குழம்புடன் கொண்டாடிய கணவன்!

மகன் வெறிச்செயல்

அதில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அது அவரது இரண்டாவது மகனின் சட்டை பட்டன் என்பது தெரியவந்தது. பின் அவரிடம் விசாரித்ததில், எனது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அந்த கோபத்தில் அம்மா என்னை அடித்தார்.

படிக்கச் சொன்ன தாயை தாலியால் துடிக்கத் துடிக்கக் கொலை செய்த சிறுவன் - பகீர் பின்னணி | Boy Kills Mother Near Kallakurichi

மேலும், படிக்காமல் ஏன் ஊர் சுற்றுகிறாய்? எனவும் கண்டித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். அவரை பின்தொடர்ந்து நானும் சென்றேன். அங்கு வைத்து எனது தாயிடம்,

"ஏன் அடிக்கடி என்னை கண்டிக்கிறாய்?" என கேட்டேன். அதற்கு அவர் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் கோபமடைந்த நான், அவரை தள்ளிவிட்டு கழுத்தை காலால் மிதித்தேன். அப்படியும் அவர் உயிர் போகாதால், அவர் அணிந்திருந்த தாலி கயிற்றைக்கொண்டு கழுத்தை இறுக்கினேன்.

இதனால் சில நொடிகளில் அவர் உயிரிழந்து விட்டார். பின்னர், நான் எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு வந்து விட்டேன். வெகு நேரம் ஆகியும் தாய் வரவில்லை என எனது தந்தை மற்றும் உறவினர்கள் அவரை தேடினர். நானும் அவர்களுடன் சேர்ந்து தேடுவது போல நடித்து நாடகம் ஆடினேன்.

ஆனால், போலீஸ் விசாரணையில் மாட்டிக்கொண்டேன்'' என தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.