விமானத்தில் சந்தித்து கொண்ட 2 பேர் - ஒரே மாதிரியான தோற்றம், பெயரால் குழப்பம்!
ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இருவர் சந்தித்துக் கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.
சுவாரஸ்ய நிகழ்வு
உலகத்தில் ஒரே மாதிரியாக ஏழு பேர் இருப்பார்கள் என்று கூறுவார்கள். இதனால் நம்மைப் போல இருப்பவர்களை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம்.
அப்படி சந்தித்துக்கொண்டவர்களை பற்றியும் நாம் சமூக வலைத்தளங்கள் மூலமாக கேட்டிருப்போம். அந்தவகையில் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இருவர் சந்தித்துக் கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.
குழம்பிய பணியாளர்கள்
இங்கிலாந்து நாட்டின் லண்டனில் இருந்து பாங்காக் சென்ற விமானத்தில் அச்சு அசலாக ஒரே மாதிரி தோற்றம் கொண்ட 2 பேர் ஏதேச்சையாக சந்தித்துக்கொண்டனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இருவரின் பெயரும் 'மார்க் கார்லாண்ட்' ஆகும்.
ஆனால் இருவருக்கும் இடையில் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இருவரும் ஒரே நபர் என நினைத்து விமான பணியாளர்களும் சற்று குழம்பிப் போயினர். இறுதியில் ஒருவருக்கு 58 வயது, மற்றொருவருக்கு 62 வயது என தெரியவந்த பிறகே குழப்பம் தீர்ந்துள்ளது.