காணாமல் போன பள்ளி மாணவிகள்..சடலமாக மீட்கப்பட்ட கொடூரம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்!
7ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவிகள்
ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள கலிபேலா பகுதியில்நோடல் பிரைமரி பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில் ஜோதி ஹல்தார் (வயது 13) மற்றும் மந்திரா சோடி (வயது 13)என்பவர்கள் 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சிறுமிகள் இருவரும் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளனர். பின்னர் பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவர்களது குடும்பத்தினர் வீடுகளில் தேடியுள்ளனர்.ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, இன்று காலை அப்பகுதி மக்கள் சிலர் விறகு சேகரிப்பதற்காக பிலிகுடா கிராம மலைக்குக் கீழே உள்ள வனப்பகுதிக்கு வந்து பார்த்தபோது, மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சிறுமிகளின் உடல்கள் கிடந்தன.
சடலமாக மீட்பு
இது குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினர் சம்பவ இடத்திலிருந்த இரண்டு மாணவர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காணாமல் போன மாணவிகள் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதாவது காரணமா என விசாரித்து வருகின்றனர்.