திருமணமான 4 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை - போதையால் நடந்த சோகம்
திருமணமான 4 நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காதல் திருமணம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜோதி கிருஷ்ணன் (22) கூலி தொழிலாளியோக பணியாற்றி வந்தார்.
இதனிடையே ஜோதி கிருஷ்ணன், இராசிபுரம் பகுதியை சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து வந்ததார். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமையன்று ரேஷ்மாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
மது போதை
ஆனால் இதற்கு ஜோதி கிருஷ்ணனின் தாய் சின்னகண்ணு இந்த பெண் வேண்டாம் என கூறி அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு சென்று விட்டுள்ளார். இதனையடுத்து ரேஷ்மா போன் செய்து தனது உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
ரேஷ்மாவின் உறவினர்கள் சின்னகண்ணுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, ஜோதி கிருஷ்ணனின் குடும்பத்தினர் ரேஷ்மாவிற்கும் ஜோதி கிருஷ்ணனுக்கும் கடந்த 3.02.2025 அன்று திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் இன்று(07.02.2025) மது போதையில் இருந்த ஜோதிகிருஷ்ணன் தனது வீட்டின் ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டு வாசல்படியில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.
தூக்கிட்டு தற்கொலை
இதனால் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கும் ஜோதி கிருஷ்ணனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்ப்பட்டது. இதனையடுத்து, மதுபோதையில் வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டு கொணடதாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து ரேஷ்மா கதவை தட்டியுள்ள நிலையில், வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைந்துள்ளனர். அப்போது ஜோதி கிருஷ்ணன் தூக்கில் தொங்கி கொண்டு இருந்துள்ளார். அவரை உடனே கீழே இறக்கி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 4 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டுக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.