டுவிட்டரின் புதிய சிஇஓ - முதல் ட்வீட்லயே எலான் மஸ்க்கை கவர்ந்தார்!
சமீபத்தில் எலான் மஸ்க் தனது டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவை அறிமுகப்படுத்தினார், தற்போது அவர் பதவி ஏற்றதும் தனது முதல் ட்வீட்டை போட்டுள்ளார்.
புதிய சிஇஓ
உலகின் டாப் பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க், தனது டுவிட்டர் நிறுவனத்திற்கு சமீபத்தில் புதிய சிஇஓவை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து லிண்டா யக்காரினோ சிஇஓவாக பதவி ஏற்றார்.

அவர் பதவியேற்றதும் அவரது டுவிட்டர் பக்கத்தில், அவர் செய்த முதல் ட்வீட், "ட்விட்டரின் வளர்ச்சிக்காக எலான் மஸ்க் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்று தெரிவித்திருந்தார்.
டுவிட்டர் 2.0
இந்நிலையில், இவர் ட்விட்டர் 2.0வை உருவாக்க தான் உறுதியுடன் இருப்பதாகவும் வணிக செயல்பாடுகளை அதிகப்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இவர் பத்து ஆண்டுகளுக்கு மேலாக என்பிசி யூனிவர்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
பின்னர், அந்நிறுவனத்தின் தொழில் துறை வழக்கறிஞராகவும், விளம்பர விற்பனை தலைவராகவும் இருந்த அனுபவம் உள்ளது.
அதனால் அவர் ட்விட்டரை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.