ரெட்டை கதிரே! மார்க்கும் இரட்டை தான் - +2 பொதுத்தேர்வில் ஒரே மார்க் எடுத்த இரட்டையர்கள்!!
பொதுத்தேர்வு முடிவுகள்
+2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிப்பட்டது. 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
எப்போதும் போல் இந்த வருடமும் மாணவர்களை விட மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி (4.07%) அடைந்துள்ளனர். மொத்தமாக 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் பாடத்தில் 35 பேரும், ஆங்கிலத்தில் ஏழு பேரும் இயற்பியலில் 633 பேரும், வேதியியலில் 471 பேரும் , நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவ - மாணவிகள் தேர்வு முடிவுகளை பார்த்த பெருமூச்சு விட்டுள்ள நிலையில், இந்த தேர்வில் நடைபெற்ற சுவாரசிய சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
இரட்டையர்கள்
அந்த தகவலின் படி, இரட்டையர்கள் இருவர் ஒரே மதிப்பெண்ணை பெற்றுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் படித்த இரட்டையர்களான நிகில் மற்றும் நிர்மல் இருவருமே பஞ்ச நதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளனர்.
வெளியான பொதுத்தேர்தல் முடிவுகளில் இருவரும், 600'க்கு 478 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். இரட்டையர்கள் இருவருமே ஒரே மதிப்பெண் பெற்றுள்ள தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.