+2 வகுப்பு பொதுத்தேர்வு - மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் - சென்னை நிலவரம் தெரியுமா?

Tamil nadu India
By Karthick May 06, 2024 05:29 AM GMT
Report

தமிழகத்தில் +2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

+2 வகுப்பு பொதுத்தேர்வு

+2 வகுப்பு மாணவர்களும், பெற்றோர்களும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த +2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

+ 2 result district wise result

எப்போதும் போல் இந்த வருடமும் மாணவர்களை விட மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி (4.07%) அடைந்துள்ளனர். மொத்தமாக 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 100 சதவீத மதிப்பெண்கள் - விவரம் இதோ!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 100 சதவீத மதிப்பெண்கள் - விவரம் இதோ!

தமிழ் பாடத்தில் 35 பேரும், ஆங்கிலத்தில் ஏழு பேரும் இயற்பியலில் 633 பேரும், வேதியியலில் 471 பேரும் , நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

+ 2 result district wise result

7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதிக தேர்ச்சியடைந்த மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் 97.45% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

+ 2 result district wise result

அடுத்தடுத்த இடங்களில் சிவகங்கை ஈரோடு தலா 97.42% தேர்ச்சியும், அரியலூர் 97.25% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 94.48% தேர்ச்சி கிடைத்துள்ளது.

+ 2 result district wise result

திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் தேர்ச்சி குறைத்த அளவில் தேர்ச்சி வந்துள்ளது. அம்மாவட்டத்தில் 90.47% தேர்ச்சி கிடைத்துள்ளது.