குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க சென்ற தந்தை - திரும்பி வருவதற்குள் நடந்த அவலம்!

Death World Israel-Hamas War Gaza
By Swetha Aug 16, 2024 08:13 AM GMT
Report

பிறந்து நான்கு நாட்களே ஆன இரட்டை குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறப்பு சான்றிதழ்

பாலஸ்தீனத்தின் மிகப்பெரிய நகராக திகழ்ந்து வரும் காஸா தற்போது மிகப்பெரிய துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் இதுவரையிலும் ஓயவில்லை. மணிக்கொரு முறை கொத்து கொத்தாக மனித உடல்களை அள்ளி செல்லும் அவலம் காணப்படுகிறது.

குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க சென்ற தந்தை - திரும்பி வருவதற்குள் நடந்த அவலம்! | Twins Killed In Gaza During Israel Airstrike

உயிருக்கு அஞ்சி வேறு நகரங்களை நோக்கி மக்கள் ஓடி கொண்டிருக்கின்றனர். அப்படி காஸாவில் இருந்து சிதறி ஓடி வந்தவர்களுக்கு அடைக்கலம் தந்த நகரம் தான் கான் யூனிஸ். இந்த பகுதி பாலஸ்தீன மக்களின் கடைசி நம்பிக்கை என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் பிறந்த 4 நாட்களே ஆன இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முகமது மஹ்தி அபு அல்-கும்சன் என்பவரின் மனைவி ஒரு மருத்துவர். இந்த தம்பதிக்கு 4 நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

போரை நிறுத்த ஹமாஸ் ஒப்பதல் - பச்சைக்கொடிக்கு இஸ்ரேலின் முடிவு என்ன?

போரை நிறுத்த ஹமாஸ் ஒப்பதல் - பச்சைக்கொடிக்கு இஸ்ரேலின் முடிவு என்ன?

நடந்த அவலம்

போர் பூமியில் பிறந்த பச்சிளங் குழந்தைகளை எப்படி காப்பாற்றி விட வேண்டும் என்று பெற்றோர் விரும்பினர். தங்கள் குழந்தைகளுக்கு ஐசெல், ஐசெர் அபு அல்-கும்சன் என்று பெயரிட்டனர். இந்த சூழலில் தங்கள் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக முகமது மஹ்தி அபு அல்-கும்சன் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க சென்ற தந்தை - திரும்பி வருவதற்குள் நடந்த அவலம்! | Twins Killed In Gaza During Israel Airstrike

அதற்காக அரசு அலுவலகத்திற்கு சென்று தனது இரண்டு குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழ் வாங்கி கொண்டு திரும்பியுள்ளார். ஆனால் அதற்குள் அவரது வீட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் வீசிய குண்டுகள் தாக்கியிருந்தன.

முகமது மஹ்தி அபு அல்-கும்சனின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்து கிடந்தனர். இவர்கள் மூவரையும் ஒரே பைக்குள் வைத்து அடக்கம் செய்யும் சோக நிலைக்கு தள்ளப்பட்டார். இவரை போல பச்சிளங் குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர் பலர் காஸாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.