போரை நிறுத்த ஹமாஸ் ஒப்பதல் - பச்சைக்கொடிக்கு இஸ்ரேலின் முடிவு என்ன?
ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் ஒப்புதல்
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.
இதில், ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்ததோடு, நூற்றுக்கணக்கானோரை பணயக் கைதிகளாக சிறை பிடித்தும் சென்றனர் தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்தார்.
ஹமாஸ் அமைப்பின் பதுங்கு தளமான காசா மீது இஸ்ரேல் வான்வழி, தரைவழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வந்தது. 7 மாதங்களாக நடந்து வரும் போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்துள்ளனர். இதனை முடிவுக்கு கொண்டுவர பல உலக நாடுகள் களத்தில் இறங்கியது.
இஸ்ரேல் மறுப்பு
ஆனால் எதுவும் சரிவர அமையவில்லை. ஐநா எச்சரிக்கைக்கும், கவலைக்கும் இஸ்ரேல் செவி சாய்த்த பாடும் இல்லை. இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து முன்மொழிந்தன. இதனை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.
அதன்படி காசா போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.