ஐஸ் கிரீம் சாப்பிட்டதால் உயிரிழப்பு - இரட்டைக் குழந்தைகளுக்கு நேர்ந்த விபரீதம்!

Karnataka Death Ice Cream
By Swetha Apr 18, 2024 06:33 AM GMT
Report

ஐஸ் கிரீம் சாப்பிட்ட ஒன்றரை வயதுடைய இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐஸ் கிரீம் விபரீதம்

இந்த ஆண்டு கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த கோடைகாலம் வந்து விட்டாலே குளிர்தரும் பொருட்கள் விற்பனை அதிகரிப்பது வழக்கம். இளநீர், தர்பூசணி, சர்பத் என வெயிலுக்கு இதமான குளிர் உணவுகளை தேடி மக்கள் போவது உண்டு. இன்னும் சிலரே ஐஸ் கிரீமை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

ஐஸ் கிரீம் சாப்பிட்டதால் உயிரிழப்பு - இரட்டைக் குழந்தைகளுக்கு நேர்ந்த விபரீதம்! | Twins Dead After Eating Ice Cream

அப்படி  விரும்பிச் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்தில் ஒருவர் ஐஸ் கிரீம் விற்பனை செய்து வந்துள்ளார். அவரிடம் ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் வாங்கியுள்ளனர்.

தவளை இறந்து கிடந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...!

தவளை இறந்து கிடந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...!

குழந்தைகள் உயிரிழப்பு

அவர்கள் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மூன்று பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில் ஒன்றரை வயது இரட்டைக் குழந்தைகளான பூஜா, பிரசன்னா வீட்டிலேயே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மயங்கிய நிலையில் இருந்த அவர்களது தாயை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஐஸ் கிரீம் சாப்பிட்டதால் உயிரிழப்பு - இரட்டைக் குழந்தைகளுக்கு நேர்ந்த விபரீதம்! | Twins Dead After Eating Ice Cream

இது குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து, உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீஸார், ஐஸ் கிரீம் விற்ற அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.