தவளை இறந்து கிடந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...!

Tamil nadu Madurai
By Nandhini Feb 06, 2023 08:28 AM GMT
Report

மதுரையில் தவளை இறந்து கிடந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஐஸ்கிரீம் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி

மதுரை, கோவலன் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் அன்புசெல்வம். இவரது மனைவி ஜானகிஸ்ரீ. இவர்கள் தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று இவர் தனது மகள்கள் மித்ராஸ்ரீ (8), ரக்சனாஸ்ரீ (7) மற்றும் உறவினர் மகள் தாரணி (4) ஆகியோரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்றனர்.

அப்போது, கோவில் அருகில் உள்ள ஒரு சிற்றுண்டி கடையில் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளனர். அந்த ஐஸ்க்ரீம் சாப்பிட்ட 3 குழந்தைகள் திடீரென வாந்தி எடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜானகிஸ்ரீ குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீமை வாங்கி பார்த்துள்ளார்.

அப்போது ஐஸ்கிரீமில் ஒரு தவளை இறந்து கிடந்தது. இதனையடுத்து, வாந்தி எடுத்த 3 குழந்தைகளும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஜானகிஸ்ரீ போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.    

3-children-vomited-eating-ice-cream-with-dead-frog