ரெட்டை கதிரே இதோ நீ நாம் .. இன்டர் மீடியேட் தேர்வில் சாதனை படைத்த இரட்டை சகோதரிகள்

Hyderabad Viral Photos
By Irumporai Jun 29, 2022 10:14 AM GMT
Report

தெலுங்கான மாநிலத்தில் இண்டர் மீடியட் தேர்வுகள் வெளியான நிலையில் அதில் ஒட்டிய தலையுடன் வாழும் இரட்டை சகோதரிகள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்து சாதனை படைத்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

twins Veena and Vani

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 11 அம் வகுப்பு 12 ஆம் வகுப்புகள் இருப்பது போல தெலுங்கானாவில் இண்டர் மீடியட் இரண்டு ஆண்டுகள் உள்ளது. அந்த வகையில் இண்டர் மீடியட் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே ,மாதம் நடைபெற்ற நிலையில் நேற்று முடிவுகள் வெளியாகின.

ரெட்டை கதிரே

இதில் முதலாம் ஆண்டில் மாணவிகள் 72.33 சதவீத மும் மாணவர்கள் 54.29 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் அதே போல் இரண்டாம் ஆண்டில் மாணவிகள் 75.28 சதவீதமும் மாணவர்கள் 59.21 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  இந்த நிலையில் ஹைத்ராபாத் பகுதியை அடுத்த யூசுஃப்குடா பகுதியிப் இண்டர்மீடியட் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சகோதரிகள் பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்துள்ளனர்.

சாதித்த இரட்டையர்கள்

இந்த இரட்டையர்கள் இருவரும் பிறகும் போதே ஒட்டி பிறந்தவர்கள், ஒட்டிய தலையுடனே பள்ளி சென்று வந்த இந்த சகோதரிகள் , முதன்மை பாடமாக அரசியல் அறிவியல் பிரிவினை தேர்வு செய்து நல்ல மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

twins Veena and Vani

இரட்டை சகோதரிகளில் ஒருவரான வாணி 712 மதிப்பெண்களும் மற்றொருவர் 707 மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். இவர்களை பாரட்டியுள்ள குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்யாவதி ரத்தோட் இவர்களின் மேல் கல்விக்கான அனைத்து செலவுகளையும் தெலுங்கான அரசு வழங்கும் எனக் கூறினார்.

ரெட்டை கதிரே இதோ நீ  நாம் .. இன்டர் மீடியேட் தேர்வில் சாதனை படைத்த  இரட்டை சகோதரிகள் | Twin Sisters Joined Heads Pass Intermediate Exam

வீணாவும் வாணியும் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏழைப் பெற்றோருக்குத் தலை இணைந்த நிலையில் பிறந்தனர். பல்வேறு காரணங்களால் அவர்களைப் பிரிக்க அறுவை சிகிச்சை செய்ய பல்வேறு மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்க்காத நிலையில் சோதனைகளை துடைத்தெறிந்து சாதித்துள்ளனர் இந்த சகோதரிகள்.

 தன்பாலின திருமணம்: பெண்ணை காப்பகத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!