அன்பு தங்கைகளே.. இது உங்கள் அண்ணன் எழுதும் கடிதம் - தவெக தலைவர் விஜய் உருக்கம்!

Vijay Tamil nadu Sexual harassment Thamizhaga Vetri Kazhagam
By Swetha Dec 30, 2024 02:21 AM GMT
Report

தவெக தலைவர் விஜய் பெண்கள் பாதிகாப்பு அரணாக நிற்பேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது தமிழகம முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்பு தங்கைகளே.. இது உங்கள் அண்ணன் எழுதும் கடிதம் - தவெக தலைவர் விஜய் உருக்கம்! | Tvk Vijay Wrote Letter Over Anna University Issue

இந்த விவகாரம் தொடர்பாக விஜய் எழுதியுள்ள கடிதத்தில், “அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கெண்டு, ஒவ்வொரு நாகும் தமிழத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும்

அண்ணா பல்கலைகழக பாலியல் வழக்கு; முதலமைச்சரே முழு பொறுப்பு - அண்ணாமலை ஆவேசம்

அண்ணா பல்கலைகழக பாலியல் வழக்கு; முதலமைச்சரே முழு பொறுப்பு - அண்ணாமலை ஆவேசம்

விஜய் உருக்கம்!

சமூக அவலங்கள் சட்டம் வழங்கு சர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கன்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொனா வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகப்பைக் கேட்பது?

அன்பு தங்கைகளே.. இது உங்கள் அண்ணன் எழுதும் கடிதம் - தவெக தலைவர் விஜய் உருக்கம்! | Tvk Vijay Wrote Letter Over Anna University Issue

நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும் அரணாகவும்,

எனவே எதைப் பற்றியும் கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவாம், அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்