1 மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு...நடைபயணம்!! திட்டங்களை வரையறுக்கும் த.வெ.க தலைவர் விஜய்!!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விரைவில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர்கள் கட்சி துவங்குவதை தொடர்ந்து, நடிகர் விஜயும் தற்போது அரசியலில் கால் பதித்துள்ளார். பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் நிறுவப்பட்டது. அப்போதிலிருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளில்,கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் கட்சி நிர்வாககிகள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
அதே நேரத்தில், கட்சி தலைவர் விஜய் அநேக மாநில சார்ந்த விஷயங்களில் தனது கருத்தை தெரிவித்து வருகிறார். சமூகவலைதளபதிவுகளாவே அவை வெளியாகின. அதனை தொடர்ந்து, அண்மையில் மாணாக்கருக்கு கல்வி விருது விழா நடத்தினார்.
அப்போது நீட் தேர்வு குறித்து பேசி, தமிழகத்தில் பல விமர்சனங்களையும் பெற்றார் தலைவர் விஜய். இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு 2 வருடமே இருக்கும் நிலையில், கட்சி பணிகள் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்ப்புகள் உள்ளது.
விஜய் எப்போது கட்சி சின்னம், கொடி போன்றவற்றை அறிவிப்பார் என பலரும் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
நடைபயணம்
இந்த சூழலில் தான் ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு உட்பட 10 பொதுக்கூட்டங்களை தமிழக வெற்றிக் கழகம் நடத்தவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெறலாம் என்றும் அதற்கான பணிகளும் துவங்கிவிட்டது கூறப்படுகிறது. இந்த மாநாடு என்பது வரும் செப்டம்பரில் அல்லது நவம்பரில் நடைபெறலாம் என தெரிகிறது.
அதே போல 4 மண்டல மாநாடுகள் - தமிழக மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு எனவும் நடைபெறவுள்ளதாம். இதனை தொடர்ந்து மக்களை நேரடியாக சந்திக்க அவர், 100 சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளன.
முன்னதாக கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவேற்றம் செய்த அடுத்த நாளே கட்சியின் கொடி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிடலாம் என்றும் கூறப்படுகிறது.