மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கை..ஓங்கி ஒலித்த தவெகவின் கொள்கை பாடல்!
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டுக்கு மார் 8 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்
விஜய் இன்று தனது அரசியல் கட்சிக்கான முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை பகுதியில் நடைபெற்று வருகிறது.
இதில் பல மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் வந்துள்ளனர்.மாநாட்டுக்கு மார் 8 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாநாட்டு மேடைக்குச் சரியாக 4 மணிக்கு விஜய் வந்த அவர் சிறிது நேரம் தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தார். பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் நோக்கி ஓடி வந்தார்.அதன் பிறகு, சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதைதவெக தலைவர் விஜய் செலுத்தினார்.
உறுதிமொழி
இந்த மாநாட்டில் இருக்கும் கூட்டத்தைப் பார்த்த விஜய் உற்சாகமடைந்தார். தொடர்ந்து 100 அடி உயரக் கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி வைத்தார். இந்த கொடி அந்த மாநாட்டு இடத்திலேயே இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. அப்போது கட்சியின் கொடி பாடல் இசைக்கப்பட்டது.
ரிமோட் உதவியுடன் கட்சிக் கொடியை விஜய் ஏற்றினார். அதன்பிறகு மாநாட்டில் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கத்தை பேணிக் காப்போம் என தொடங்கும் உறுதிமொழியை தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் வாசிக்கத் தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர்.