ஊழல் பட்டியலை கையில் எடுக்கும் விஜய் - ஆளுநருடன் சந்திப்பு?
ஊழல் பட்டியலை தயாரிக்க தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தவெக மாநாடு
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் நடத்தினார்.
மாநாட்டில் பேசிய விஜய், மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாத்துறிங்க, ஊழல் கபடதாரிகள் என திமுகவை விமர்சித்தார். மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பேசினார்.
ஊழல் பட்டியல்
மாநாட்டில் விஜய் பேசிய கருத்துகள் தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை முடித்த பின், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினார்.
மேலும், கட்சிக்கு ஒன்றியம் முதல் மாவட்டம் மாநிலம் வரை நிர்வாகிகளை நியமித்து கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி விட்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளார்.
இதனிடையே, ஆளும், ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியலை துறை வாரியாக தயாரிக்க கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநருடன் சந்திப்பு
ஆதாரம் இல்லாமல் பேசினால் வழக்குகளை சந்திக்க நேரிடும் என்பதால் தகுந்த ஆதாரங்களுடன் ஊழல் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டுள்ளார். ஊழல் பட்டியலுடன் ஆளுநரை சந்திக்கவும் திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் செல்லும் முன் ஊழல் பட்டியலை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுப்பயணத்தில் ஊழல் எதிர்ப்பை முன்னிறுத்தியே விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.