தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் விஜய் - தேதியை அறிவித்த தாடி பாலாஜி
விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்திய அவர் அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை அறிவித்ததோடு கொள்கை எதிரி, அரசியல் எதிரி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பேசினார்.
சுற்றுப்பயணம்
அதன் பிறகு விஜய் களத்திற்கு வரவே இல்லை, அறிக்கை மூலமே அரசியல் செய்கிறார், பனையூருக்கு வரவைத்தே வெள்ள நிவாரணம் வழங்கினார் என மாற்று கட்சியினர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக நடிகரும், தமிழக வெற்றி கழக நிர்வாகியுமான தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், விஜய் ஜனவரி 27 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பார். இதுவரை தலைவர்கள் சென்ற சுற்றுப்பயணத்தை விட, விஜய் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் வேற லெவலில் இருக்கும். ஒரு ஃபயராக இருக்கும்.
சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, எனக்கு ஏதாவது பணி கொடுத்தால் அவர் சந்தோஷப்படுகின்ற அளவுக்கு சிறப்பாக செய்வேன்" என தெரிவித்துள்ளார்