விஜய்க்கு சினிமாவில் கடைசி வரை நிறைவேறாத ஒரு ஆசை - என்ன தெரியுமா?
விஜய்யின் 32 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளதாம்.
விஜய்
நாளைய தீர்ப்பு படம் மூலம் விஜய் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 32 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆரம்ப காலத்தில் விஜய் நடித்த படங்கள் சரியாக ஓடாமல், விமர்சனங்களை பெற்றிருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உயர்ந்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி, முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தார்.
இயக்குநர் ஆசை
விஜய் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படமான தளபதி 69 ல் நடித்து வருகிறார். இந்த படத்துடன் தனது சினிமா வாழ்க்கையை முடித்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
பட வசூல், சம்பளம், ரசிகர் பட்டாளம் என அனைத்திலும் உச்சத்தை தொட்டாலும், விஜய்க்கு சினிமா வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளதாம்.
விஜய் கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்தே, ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். இதை இயக்குநர் விஜய் மில்டனிடமும் தெரிவித்து இருக்கிறார்.
விஜய் மகன்
நடிப்பதில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து, திரைப்படங்களை எடுக்கலாம் என்ற ஐடியா உள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் நடிப்பிலே பிஸியாக இருந்ததால் அந்த வாய்ப்பு அமையவில்லை. விஜய்யின் இயக்குநர் ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போய் விட்டதே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
விஜய் சினிமா வாழ்க்கையை முடிக்கும் நேரத்தில், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா தயாரிப்பில், சந்தீப் கிஷானை வைத்து தனது முதல் படத்தை இயக்குவதன் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார்.