தவெகவில் உருவாக்கப்படும் 28 அணிகளின் பட்டியல் - திருநங்கை அணியால் கிளம்பிய எதிர்ப்பு?
தமிழக வெற்றிக் கழகத்தில் 28 சார்பு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
தவெக
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு களமிறங்கியுள்ள தவெக தலைவர் விஜய், தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் பட்டியலை விஜய் வெளியிட்டார். விசிக துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் மேலாண்மை பிரிவு செயலாளர் பதவி, பாஜக, அதிமுகவின் ஐடி விங்கின் தலைமை பொறுப்பில் பணியாற்றிய சி.டி.நிர்மல் குமாருக்கு ஐடி மற்றும் சமூக ஊடக துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோர்
இந்நிலையில் நேற்றும் இன்றும் இந்தியாவின் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், விஜய்யை அவரது சென்னை நீலாங்கரை இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, பொதுச்செயலாளர் ஆனந்த், தவெக வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.
கட்சியின் கட்டமைப்பை உருவாக்குவது, 2026 தேர்தலுக்கு செய்ய வேண்டிய பணிகள், தவெகவிற்கு தற்போதுள்ள வாக்கு சதவீதம் மற்றும் அதை எப்படி அதிகரிப்பது, பிற கட்சிகளை எவ்வாறு விமர்சிப்பது போன்ற விசயங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போன்று தொடர் ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
28 சார்பு அணிகள்
இந்நிலையில் தவெக கட்சியில் 28 சார்பு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பட்டியல் ஒன்றை சமூகவலைத்தளத்தில் தவெகவினர் பகிர்ந்து வருகின்றனர். இந்த அணிகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அணிகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
1.) தகவல் தொழில்நுட்ப பிரிவு
2.) வழக்கறிஞர் பிரிவு
3.) மீடியா பிரிவு
4.) பிரச்சாரம் மற்றும் பேச்சாளர்கள் பிரிவு
5.) பயிற்சி மற்றும் தொண்டர் மேம்பாட்டு பிரிவு
6.) உறுப்பினர் சேர்க்கை பிரிவு
7.) காலநிலை ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு
8.) வரலாற்று தரவு ஆராய்ச்சி & உண்மைச் சரிபார்ப்பு பிரிவு
9.) திருநங்கைகள் பிரிவு
10.) மாற்றுத்திறனாளிகள் பிரிவு
11.) இளைஞர்கள் பிரிவு
12.) மாணவர்கள் பிரிவு
13.) பெண்கள் பிரிவு
14.) இளம் பெண்கள் பிரிவு
15.) குழந்தைகள் பிரிவு
16.) தொண்டர்கள் பிரிவு
17.) வர்த்தகர் பிரிவு
18.) மீனவர் பிரிவு
19.) நெசவாளர் பிரிவு
20.) ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு
21.) தொழிலாளர் பிரிவு
22.) தொழில்முனைவோர் பிரிவு
23.) அயல்நாட்டில் வசிப்பவர் பிரிவு
24.) மருத்துவர்கள் பிரிவு
25.) விவசாயிகள் பிரிவு
26.) கலை. கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பிரிவு
27.) தன்னார்வலர்கள் பிரிவு
28.) அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்
இந்தியாவில் 18வயதுக்கு உட்பட்டவர்களை கட்சி மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் குழந்தைகள் பிரிவை உருவாக்கியுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணி குழந்தைகளின் பாதுகாப்பை நோக்கமாக கொண்டு செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், திருநங்கை அணி உருவாக்கப்பட்டடது நல்ல விஷயம் தான். ஆனால் அதை 9ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இன்னும் எத்தனை நூற்றாண்டுகள்தான் இந்த “9” என்னும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்? என திருநர் இயக்க செயல்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த “9” என்னும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்? நடிகர் விஜய் திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விசயம். அதை 9ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா!… pic.twitter.com/QK7ZnGti5z
— Living Smile (@livingsmile) February 11, 2025
சமூகவலைத்தளங்களில் எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்பி வரும் நிலையில், அதனை முறியடிக்க வரலாற்று தரவு ஆராய்ச்சி & உண்மைச் சரிபார்ப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.