தேர்தல் அறிவிப்பு; தவெகவில் திடீர் ஆலோசனை - பிளானையே மாற்றிய விஜய்!
தமிழக வெற்றிக் கழக கட்சி பிளான்களை மாற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தவெக
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் விஜய். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். மகளிர் தினத்தன்று கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி
தற்போது, லட்சக்கணக்கானோர் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியானது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் தவெக போட்டியிடவுள்ளது. இதற்கிடையில், மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வந்தனர்.
விஜய் முக்கிய முடிவு
இந்நிலையில் தன் கட்சியை வலுவாக்க கட்சி நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலேசனை மேற்கொண்டு வருகிறார் விஜய். தொடர்ந்து, ட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தினம் தோறும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதில் தமிழ்நாட்டிற்கு முதல் கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதனால், நாளை தவெகவில் முதல் நடைபெற இருந்த ஆலோசனை கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.