Sunday, May 11, 2025

விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகத்தில்' இணைந்த பிரபல நடிகரின் மகன் - யார் தெரியுமா?

Vijay Tamil Cinema Tamil nadu Tamil Actors Thamizhaga Vetri Kazhagam
By Jiyath a year ago
Report

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகர் நாசரின் மகன் நூருல் ஹசன் ஃபைசல் இணைந்துள்ளார். 

தமிழக வெற்றிக் கழகம் 

நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து கட்சிக்காக பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலியை கடந்த 8-ம் தேதி அறிமுகம் செய்தார்.

விஜய்யின்

அதில் முதல் உறுப்பினராக அக்கட்சியின் தலைவர் விஜய் சேர்ந்தார். மேலும், வாட்ஸ் அப், டெலிகிராம், தொலைப்பேசி எண் வாயிலாகவும் கட்சியில் உறுப்பினராக இணையலாம். தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம் என்று தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்தார்.

நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரிய தம்பதி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரிய தம்பதி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாசரின் மகன்

இந்நிலையில் நடிகர் நாசரின் மகன் 'நூருல் ஹசன் ஃபைசல்' தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வீல் சேரில் முடங்கினார்.

விஜய்யின்

அப்போது நடிகர் விஜய் அவரது வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். ஃபைசல் நடிகர் விஜய்யின் த.வெ.க கட்சியில் இணைந்ததை, அவரின் தாயார் கமீலா நாசர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.