வெற்றி பெற்ற பிறகு வேறு எங்கும் செல்லக்கூடாது - வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

Vijay Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Karthikraja Apr 30, 2026 02:20 PM GMT
Report

வெற்றி பெற்ற பிறகு வேட்பாளர்கள் வேறு எங்கும் செல்லக்கூடாது என தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆட்சி கட்டிலில் அமரபோவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

முதல் தேர்தலை எதிர்கொள்ளும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், எடப்பாடி தவிர்த்து 233 தொகுதிகளில் போட்டியிட்டது. 

வெற்றி பெற்ற பிறகு வேறு எங்கும் செல்லக்கூடாது - வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல் | Tvk Vijay Advise Candidates For Election Result

தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

கடந்த இரு நாட்களாக திருச்செந்தூர் முருகன் கோவில், சீரடி சாய்பாபா கோவில் என ஆன்மீக பயணங்களை மேற்கொண்ட விஜய், இன்று வேட்பாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியான நிலையில், பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் மீண்டும் திமுக ஆட்சியை பிடிக்கும் என கணித்துள்ளது. 

2026 தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

2026 தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

ஆனால், ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தவெக 98 – 120 இடங்களிலும், திமுக 92 – 110 இடங்களிலும், அதிமுக 22 முதல் 32 இடங்களிலும் வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

விஜய் அறிவுறுத்தல்

பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தவெக சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து விஜய் தலைமையில் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

வெற்றி பெற்ற பிறகு வேறு எங்கும் செல்லக்கூடாது - வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல் | Tvk Vijay Advise Candidates For Election Result

இதில் வேட்பாளர்களிடம் பேசிய விஜய், காலையில் 6 மணிக்கு வேட்பாளர்கள், பூத் ஏஜென்ட்கள் ஓட்டுப்பதிவு மையங்களில் இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை எங்கும் செல்லக்கூடாது.

வெற்றி பெறும் தவெக வேட்பாளர்கள் நேரடியாக பனையூர் வர வேண்டும். வெற்றி சான்றிதழை பெற்றதும் பனையூர் தான் வர வேண்டும். வேறு எங்கும் சென்றுவிட கூடாது. நான் உங்களுக்காக காத்திருப்பேன்" என்று விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.