2026 தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
2026 தமிழ்நாடு தேர்தல் Exit poll
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது.
தமிழ்நாட்டில், மொத்தமாக 85.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுவரை நடைபெற்ற தேர்தலில் இதுவே அதிகளவிலான வாக்குப்பதிவு சதவீதமாக அமைந்துள்ளது.

ஆளும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் என தேர்தல் களத்தில் நான்குமுனை போட்டி நிலவியது.
வரும் மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில், பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் எனவும், அதிமுக எதிர்கட்சியாக இருக்கும் எனவும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 3வது இடம் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளன.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க