பாஜக கூட்டணியில் விஜய்; அமித்ஷா பேச்சு - தவெக முக்கிய அறிவிப்பு!
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்போம் என்று அமித் ஷா சூசகம் தெரிவித்தார்.
பாஜக கூட்டணி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஊழல், சட்ட ஒழுங்கு சீர்கேடு, வாரிசு அரசியலால் தமிழக மக்கள் சலிப்படைந்துவிட்டது.
அதிமுக - பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெறும். தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் இணைக்க முயற்சிப்போம். அனைத்து கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முயற்சிப்போம் என தெரிவித்தார்.
தவெக பதில்
இந்நிலையில், இதுகுறித்து தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர், ராஜ்மோகன் தெரிவிக்கையில், “ தேசத்தை பாதுகாப்பதை விட்டுவிட்டு தமிழகத்தில் பாஜகவை பாதுகாக்க அமித்ஷா போராடுகிறார்.
பாஜகவின் திட்டம் தவெகவிடம் செல்லுபடியாகாது. பாஜகவை கொள்ளை எதிரியாக வைத்து தொடங்கப்பட்ட ஒரே எதிரி தவெக. அதில் எள்ளவும் மாற்றம் இல்லை.
மண்ணின் மைந்தவர்களாக இருக்க கூடிய இஸ்லாமிய சகோதர்களுக்கு வஞ்சகம் செய்யக்கூடிய கட்சியோடு நாங்கள் எப்படி கூட்டணி வைப்பது. ” என்று தெரிவித்துள்ளார்.