சீமானுக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு இருந்தால் பயணம் தடைபடும் - தவெக அதிரடி!
சீமானை போன்று பேசுபவர்கள் ஒவ்வொருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும் என்று தவெக நிர்வாகி சம்பத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சீமான் விமர்சனம்
சீமான் விமர்சனத்துக்கு பதில் தெரிவிக்கும் வகையில், தவெக முதல் மாநில மாநாடு குறித்து சீமான் விமர்சித்திருந்தார். இந்நிலையில், அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் தவெக கட்சியின் கொள்கை விளக்க செயல் திட்டங்கள் குறித்து நிர்வாகி சம்பத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் முன்வைத்த விமர்சனங்களால் தவெக தொண்டர்கள், அவரையும் இனி மற்ற அரசியல்வாதிகளில் ஒருவராகக் கருதி விலகிச் செல்வார்கள்.
தவெக மாநாடு நடப்பதற்கு முன்பு சீமான் பேசிய பேச்சுக்களுக்கும், மாநாட்டின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவர் பேசிய பேச்சுகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு தெரிகிறது. தவெக தலைவர், பொதுச் செயலர், பொருளாளர் உள்ளிட்ட உயர்நிலை நிர்வாகிகளுக்கு பல வேலைகள் உள்ள நிலையில்,
தவெக பதிலடி
சீமானை போன்று பேசுபவர்கள் ஒவ்வொருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும். அரசியல் எதிரி யார் என்பதை முடிவுசெய்து விட்டு தவெக களமாடி வருகிறது. யாரை விமர்சனம் செய்ய வேண்டும்,
யாரை கடந்துபோக வேண்டும் என்பதை விஜய் எங்களுக்கு உணர்த்தியுள்ளார். சீமான் தனது கருத்தை தனது இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் அதை எங்களது மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை.
அவரவர் கருத்து அவரவர் உரிமை என்றும், முடிவை தமிழக மக்கள் கரங்களில் கொடுத்துவிட்டு பணியை கவனிப்பதே அனைவருக்கும் நல்லது என்று குறிப்பிட்டுள்ளார்.