தனிமனிதராகச் செயல்படுவேன்... தவெக கட்சியின் உறுதிமொழியில் இதை கவனிச்சிங்களா !

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Vidhya Senthil Aug 22, 2024 04:53 AM GMT
Report

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தாய் மொழி தமிழை காக்கும், சமூகநீதி வழியில் பயணிக்கும் என உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

நடிகர் விஜய்

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட போது நடிகர் விஜய் கட்சியை தொடங்கி அதன் பெயரை அறிவித்தார். அப்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தான் இலக்கு என அறிவித்து விறுவிறுப்பை கூட்டினார். அதனையடுத்து உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாட்டிற்கான பணிகள் என தீவிரமாக செய்யல்பட்டு வந்தார்.

தனிமனிதராகச் செயல்படுவேன்... தவெக கட்சியின் உறுதிமொழியில் இதை கவனிச்சிங்களா ! | Tvk Party Vijay Reveals Pledges

அந்த வகையில் சென்னை பனையூரில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்தார். அதன் பிறகு உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது . அதில், நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

 

அவ்வளவு பாசம்..! அம்மாவிற்காக சென்னை அருகே கோவிலே கட்டிய தளபதி

அவ்வளவு பாசம்..! அம்மாவிற்காக சென்னை அருகே கோவிலே கட்டிய தளபதி

உறுதிமொழி

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.

 தனிமனிதராகச் செயல்படுவேன்... தவெக கட்சியின் உறுதிமொழியில் இதை கவனிச்சிங்களா ! | Tvk Party Vijay Reveals Pledges

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி,

அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.