மக்கள் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது - தவெக விஜய் ஆவேசம்!

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Vidhya Senthil Mar 08, 2025 01:30 PM GMT
Report

 அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்ததற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 தமிழக அரசு

தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

மக்கள் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது - தவெக விஜய் ஆவேசம்! | Tvk Members Arrested Vijay Condemns

பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி,உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.

பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிய திமுக - வீடியோ வெளியிட்டு கொதித்த விஜய்

பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிய திமுக - வீடியோ வெளியிட்டு கொதித்த விஜய்

தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது.

விஜய் கண்டனம்

ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மக்கள் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது - தவெக விஜய் ஆவேசம்! | Tvk Members Arrested Vijay Condemns

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.