நீட் தேர்வு விவகாரம்..மாநில அரசால் ரத்து செய்ய முடியாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவெக தலைவர் பதிலடி!

Vijay M K Stalin Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Vidhya Senthil Jan 11, 2025 10:42 AM GMT
Report

நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? என்று தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  நீட் தேர்வு

தமிழ் நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்து விவாதம் நடைப்பெற்றது. இதில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு 4 ஆண்டுகளாகியும் நீட் தேர்வை திமுக அரசு ரத்து செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.

mk stalin vs tvk vijay

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை மத்திய அரசு தான் ரத்து செய்ய முடியும் என்றும்,இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு நிச்சயமாக ரத்து செய்யப்படும் என பதிலளித்தார்.இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய பதிலுக்கு தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேடையில் பேசும் போது எக்காரணத்தைக் கொண்டும்..நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் உத்தரவு!

மேடையில் பேசும் போது எக்காரணத்தைக் கொண்டும்..நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் உத்தரவு!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே..என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து,

 தவெக தலைவர் விஜய் 

மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது.இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.

mk stalin vs tvk vijay

கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது.

மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.