ஆளுநர் யாராக இருந்தாலும் சரி.. தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்க வேண்டும் - தவெக தலைவர் விஜய் அதிரடி!

Vijay Tamil nadu R. N. Ravi TN Assembly
By Vidhya Senthil Jan 06, 2025 03:30 PM GMT
Report

   மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும், தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை 

தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் உரையை வாசிக்காமல் எழுந்து சென்றார். ஆளுநரின் இந்த செயலுக்குத் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

vijay says governor must follow assembly tradition

அந்த வகையில் தற்போது தவெக தலைவர் விஜய் ஆளுநரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு.

ஆண்டின் முதல் கூட்டத்தொடர்..சட்டப்பேரவைக்கு வந்த வேகத்தில் வெளியேறிய ஆளுநர் -நடந்தது என்ன?

ஆண்டின் முதல் கூட்டத்தொடர்..சட்டப்பேரவைக்கு வந்த வேகத்தில் வெளியேறிய ஆளுநர் -நடந்தது என்ன?

பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

தவெக தலைவர்

ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும்.

vijay says governor must follow assembly tradition

மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையும் எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.