உச்சகட்ட எதிர்பார்ப்பு..இன்று கூடும் தமிழ்நாடு சட்டப்பேரவை -ஆளுநர் உரை எப்படி இருக்கும்?
இன்று கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருக்கிறார்.
சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ளது.ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக கொண்டுள்ளது.
அதன்படி இன்று காலை 9.30 மணிக்குச் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தவுள்ளார். இந்த உரை சுமார் 45 நிமிடங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையைத் தமிழில் சபாநாயகர் வாசிப்பார். அத்துடன் கூட்டம் நிறைவடையும்.
மேலும், சபாநாயகர் அறையில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரை
இதனையடுத்து நாளை ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததால் அவருக்கு இரங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.
முன்னதாக கடந்த 2023 ஆண்டு ஆளுநர் உரையை முழுமையாகப் படிக்காமல், 4 நிமிடங்களில் முடித்து பாதியில் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்றைய ஆளுநர் உரை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை எழுந்துள்ளது.