'எருமை மாடா நீ... பேப்பர் எங்க.. பொது மேடையில் உதவியாளரை திட்டிய அமைச்சர்!
நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உதவியாளரைத் தரக்குறைவாகப் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் மேலவஸ்தாசாவடியில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டி.ஆர்.பி.ராஜா, எம்.பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அப்போது நிகழ்ச்சி மேடையில் உரையாற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தயாராக இருந்தார்.
திட்டிய அமைச்சர்
மேலும் தனது உரையை தொடங்கி, ''அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் பேசினார். அப்போது மைக்கை ஆனில் வைத்துக் கொண்டே தனது உதவியாளரை நோக்கி ''எங்கே பரசுராமன்... எருமை மாடாடா நீ... பேப்பர் எங்க...'' எனக் கடிந்து பேசினார்.
இந்த சம்பவம் லர் முன்னிலையில் அமைச்சர் தனது உதவியாளரிடம் இப்படி நடந்து கொண்டது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. பொதுநிகழ்ச்சியில் உதவியாளரைத் தரக்குறைவாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.