மக்களுக்கு சேவை செய்யுங்கள்...ராகுல் காந்திக்கு த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து!!

Vijay Indian National Congress Rahul Gandhi Thamizhaga Vetri Kazhagam
By Karthick Jun 26, 2024 06:35 AM GMT
Report

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியுள்ளார்.

ராகுல் காந்தி

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அவரின் பாரத் ஜூடோ யாத்திரையும் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்களிப்பை தந்துள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

Rahul Gandhi

இரண்டு மக்களவை தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி அதில் தனது குடும்ப பாரம்பரியமான ரேபரெலி'யை தக்கவைத்து கொண்டு வயநாட்டில் ராஜினாமா செய்தார்.

மீண்டும் சபாநாயகரான ஓம் பிர்லா - கைப்பிடித்து இருக்கைக்கு அழைத்து வந்த ராகுல் காந்தி

மீண்டும் சபாநாயகரான ஓம் பிர்லா - கைப்பிடித்து இருக்கைக்கு அழைத்து வந்த ராகுல் காந்தி

வயநாடு தொகுதியில் அவரின் சகோதரி பிரியங்கா காந்தி முதல் முறை தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த சூழலில் 18-வது நாடாளுமன்றம் கூடியுள்ளது. நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியுள்ளார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விஜய் வாழ்த்து 

அவருக்கு நாட்டின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இது தொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், மாண்புமிகு திரு ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Vijay Rahul Gandhi

ஏகமனதாக லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக வாழ்த்துக்கள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.