மீண்டும் சபாநாயகரான ஓம் பிர்லா - கைப்பிடித்து இருக்கைக்கு அழைத்து வந்த ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தின் சபாநாயகராக குரல் வாக்கெடுப்பில் தேர்வாகினார் ஓம் பிர்லா.
சபாநாயகர் தேர்தல்
இந்திய நாடாளுமன்ற கூடியுள்ள நிலையில், சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 17-வது நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் முன்மொழியப்பட்டார்.
அவரை தொடர்ந்து இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கொடிகுன்னில் சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டார்.
குரல் வாக்கெடுப்பின் மூலம் நடைபெற்ற தேர்தலை ஓம் பிர்லா அதிகவாக்குகளை பெற்று சபாநாயகராக மீண்டும் தேர்வாகினார். நாட்டில் 48 ஆண்டுகளுக்கு பிறகு சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அவரை மோடி மற்றும் ராகுல் காந்தி இருவரும் கைபிடித்து சபாநாயகர் இருக்கைக்கு அழைத்து வந்தனர். நாடாளுமன்ற குரல் வாக்கெடுப்பு தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிந்ததற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ நன்றி தெரிவித்தார்.