சபாநாயகர் தேர்தல் - ஓம் பிர்லா vs கொடிகுன்னில் சுரேஷ்!!
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகருக்காக தேர்தல் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் தேர்தல்
நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில், சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதுவரை நாடு சுதந்திரம் பெற்றதில் துவங்கி மக்களவையில் சபாநாயகருக்கு தேர்தல் நடைபெற்றதில்லை. ஒருமனதாக சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். ஆனால், இம்முறை சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதே நேரத்தில், எதிர்கட்சிகள் கூட்டணி சார்பில்கொடிகுன்னில் சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஓம் பிர்லா
முதலில் ஓம் பிர்லா குறித்து பார்க்கலாம். பாஜகவின் முக்கிய ராஜஸ்தான் மாநில தலைவர்களில் ஒருவராக திகழும் ஓம் பிர்லா, 3 முறை 2003 முதல் 2014 ஆம் ஆண்டு வரை நீடித்தார்.
அதனை தொடர்ந்து மக்களவை உறுப்பினராக 2014ஆம் ஆண்டு ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் இருந்து தேர்வாகினார். மீண்டும் 2019 ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்வானவர் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கொடிகுன்னில் சுரேஷ்
கொடிகுன்னில் சுரேஷ் கேரளா காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்தவராவார். முன்னாள் மத்திய அமைச்சரரான இவர், கேரளா மாநிலத்தின் மாவேலிக்கரா தொகுதியில் இருந்து உறுப்பினராக இருக்கிறார்.
கேரளாவின் அடூர் தொகுதியில் இருந்து தொடர்ந்து 4 முறை 1989, 1991, 1996,1999 ஆகிய ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராக தேர்வாகினார். 2012ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புதுறை இணை அமைச்சராக இருந்துள்ளார்.
மக்களவை சபாநாயகர் எப்போதும் ஒருமனதாக தேர்வாகும் நிலையில், தற்போது தேர்தல் நடைபெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாளை தேர்தல் நடைபெறுகிறது.