முதல் நாள்..பதவியேற்க வந்த மோடி..சம்பவம் செய்த ராகுல்! பரபரப்பு வீடியோ
18-வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று கூடியது.
18-வது நாடாளுமன்றம்
பெறும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து நாட்டில் தனிப்பெரும் கட்சியாக மீண்டும் உருப்பெற்றது பாஜக. அதே நேரத்தில்அக்கட்சிக்கு தனிபெருபான்மை கிடைக்காத நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ் குமாரின் ஜனதா தள் ஆகிய கட்சிகளின் கூட்டணியில் ஆட்சியை பிடித்துள்ளார்.
பெரும் எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி 237 இடங்களும் அமர்ந்துள்ளது. இன்று நாட்டின் 18-வது மக்களவை கூடியது. அப்போது பிரதமர் மோடி எம்.பி'யாக பதவியேற்க தற்காலிக சபாநாயகர் அழைத்தார்.
அரசியல் சாசனம்
பிரதமர் மோடி அதற்காக வந்தபோது எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து நின்று கையில் அரசியல் சாசன புத்தகத்தை உயர்த்தி பிடித்திருந்தனர்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், அரசியல் சாசன புத்தகத்தை தலைக்கு மேல் உயர்த்தி பிடித்தனர்.
மக்களவை கூடிய முதல் நாளே,அதுவும் பிரதமர் பதவி ஏற்க வந்த போதே, எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தது சற்று சலசலப்புகளை உண்டாக்கியது.

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
