எமர்ஜென்சி நாள்..அரசியலமைப்பு துண்டு துண்டாக கிழக்கப்பட்ட நாள் - பிரதமர் மோடி கடும் விமர்சனம்
நாட்டின் 18-வது மக்களவை கூட்டத்தொடர் இன்று நடைபெறும் நிலையில், எம்.பி'க்கள் பதவியேற்பு விழாவும் நடைபெற்று வருகின்றது.
மோடி உரை
நாடாளுமன்ற வளாகம் வந்த பிரதமர் மோடி ஆற்றிய உரையை இப்பொது காணலாம். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் முக்கியமான நாள் இன்று. சுதந்திரத்திற்கு பிறகு சொந்த நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது.
அனைத்து எம்.பி'காலையும் மனதார வரவேற்கிறேன். நடந்து முடிந்த தேர்தல் மிகவும் முக்கியமானதாகும். சுதந்திரத்திற்கு பிறகு 2-வது முறை ஒரே அரசு 3 முறை பதவியேற்க மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
நாடே சிறைசாலையாக..
நாட்டை வழிநடத்த ஒருமித்த கருத்து முக்கியமானதாகும். அரசியலமைப்பு புனிதத்தை பின்பற்றி அனைவரும் ஒன்றிணைந்து முடிவுகளை எடுத்து முன்னோக்கி செல்ல விரும்புகிறோம்.
இந்திய ஜனநாயகத்தில் கருப்பு நாளாக நாளைய தினம் உள்ளது. ஜூன் 25, இந்திய அரசியலமைப்பு துண்டு துண்டாக கிழிக்கப்பட்டு நாடு சிறைச்சாலையாக மாறியது.
50 ஆண்டுகள் முன்பு நடந்த அது போன்ற செயலை மீண்டும் இந்தியாவில் யாரும் செய்ய விட மாட்டோம் என மக்கள் உறுதிகொள்ள வேண்டும்.
மக்கள் எதிர்க்கட்சியினரிடம் இருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறார்கள். நாட்டின் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை எதிர்க்கட்சிகள் நிறைவேற்றும் என நம்புகிறேன்.