தவெக கட்சி விருப்பமனு! வெறும் 2 மணிநேரத்தில் நிறுத்தப்பட்டது ஏன்?

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Manchu Feb 06, 2026 03:14 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு வழங்கிய நிலையில், ஆரம்பித்த 2 மணி நேரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

தவெக கட்சி

2026ம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தேர்தலில் தனித்து களமிறங்கும் தவெக கட்சி சார்பில் இன்று முதல் விருப்ப மனு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கமல்ஹாசனால் தமிழ்நாடு தலைகுனிந்து கொண்டிருக்கிறது: தமிழிசை சௌந்தரராஜன்

கமல்ஹாசனால் தமிழ்நாடு தலைகுனிந்து கொண்டிருக்கிறது: தமிழிசை சௌந்தரராஜன்

தவெக கட்சி விருப்பமனு! வெறும் 2 மணிநேரத்தில் நிறுத்தப்பட்டது ஏன்? | Tvk Issue Application First Day 50 Thousand Member

2.30 மணி நேரத்தில் 50 ஆயிரம் மனு

அதாவது மதியம் 12 மணி முதல் விருப்ப மனு வழங்க ஆரம்பித்த நிலையில், வெறும் 2.30 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகம் கடும் நெரிசல் ஏற்பட்டதால், மனு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

தவெக கட்சி விருப்பமனு! வெறும் 2 மணிநேரத்தில் நிறுத்தப்பட்டது ஏன்? | Tvk Issue Application First Day 50 Thousand Member

மனைவிக்காக ஆக்சிஜன் சிலிண்டர் சுமந்தபடியே கோவிலுக்கு சென்ற கணவர்

மனைவிக்காக ஆக்சிஜன் சிலிண்டர் சுமந்தபடியே கோவிலுக்கு சென்ற கணவர்

மேலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு காலியான நிலையில், தொண்டர்களை நாளை வருமாறு நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

வெறும் 2.30 மணி நேரத்தில் மனு தீர்ந்தது தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதுடன், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனுவை வாங்கியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தவெக கட்சி விருப்பமனு! வெறும் 2 மணிநேரத்தில் நிறுத்தப்பட்டது ஏன்? | Tvk Issue Application First Day 50 Thousand Member