மனைவிக்காக ஆக்சிஜன் சிலிண்டர் சுமந்தபடியே கோவிலுக்கு சென்ற கணவர்

Karnataka
By Yashini Feb 06, 2026 01:00 PM GMT
Report

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ராய்பாக் தாலுகாவின் சிஞ்சோலி கிராமத்தில் மாயக்கா தேவி கோவில் உள்ளது.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 15 ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு வந்தனர்.

இந்த வருடம் அந்த பெண்ணுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் சுவாசிக்க சிரமம் ஏற்பட்டது. அதனால் வீட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். 

மனைவிக்காக ஆக்சிஜன் சிலிண்டர் சுமந்தபடியே கோவிலுக்கு சென்ற கணவர் | Devotee Couple Bring Oxygen Cylinder For Darshan

அவருக்கு மாயக்கா தேவி அம்மனை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், மருத்துவர்களின் ஆலோசனையுடன் அவரது கணவர் ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துக் கொண்டு மனைவியை கோவிலுக்கு அழைத்து சென்றார்.

மனைவி செல்லும் இடமெல்லாம் அவர் ஆக்சிஜன் சிலிண்டரை தூக்கிச் சென்றதை பார்த்த பக்தர்கள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.