அரசியல் களத்தில் முழுமையாக இறங்கும் தவெக - இன்று அறிமுகமாகிறது கட்சி கொடி, பாடல்!

Vijay Tamil nadu Chennai Thamizhaga Vetri Kazhagam
By Swetha Aug 22, 2024 02:48 AM GMT
Report

கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

தவெக..

மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கட்சியைத் தொடங்கிய போதிலும், 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தங்கள் இலக்கு என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருந்தது.

அரசியல் களத்தில் முழுமையாக இறங்கும் தவெக - இன்று அறிமுகமாகிறது கட்சி கொடி, பாடல்! | Tvk Introduces Partys Flag And Flag Song Today

இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா இன்று பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

சரித்திரத்தின் புதிய திசை...தவெகாவின் வெற்றிக் கொடி நாளை முதல் பறக்கும்- விஜய் அழைப்பு!

சரித்திரத்தின் புதிய திசை...தவெகாவின் வெற்றிக் கொடி நாளை முதல் பறக்கும்- விஜய் அழைப்பு!

கட்சி கொடி, பாடல்

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் , நடிகருமான விஜய் கொடி ஏற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை 9.15 மணிக்கு கட்சி கொடி அறிமுகம் செய்யப்படும்

அரசியல் களத்தில் முழுமையாக இறங்கும் தவெக - இன்று அறிமுகமாகிறது கட்சி கொடி, பாடல்! | Tvk Introduces Partys Flag And Flag Song Today

விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 250 நிர்வாகிகள் பங்கேற்க உள்ள நிலையில், பாதுகாப்பு கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சிக் கொடிப் பாடலையும் அவர் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.