தவெக கட்சி கொடியில் வரலாற்றுக் குறிப்பு - அரங்கை தெறிக்கவிட்ட தலைவர் விஜய்!
தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் வரலாற்றுக் குறிப்பு உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக கட்சிக்கொடி
சென்னை பனையூரில் இன்று தவெக தலைவர் நடிகர் விஜய் கட்சிக்கொடி மற்றும் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கொடியின் மையத்தில் மஞ்சளும்,மேலும் கீழும் சிவப்பு நிறத்தில் இருக்கிறது.
அத்துடன் கொடியின் மையத்தில் இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலரும் இருக்கிறது. தொடர்ந்து நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகம் தாய் மொழி தமிழைக் காக்கும்,சமூகநீதி வழியில் பயணிக்கும் என உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு கட்சி நிர்வாகிகளிடம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசினார் .
அப்போது இன்று சந்தோஷமான நாள். என்னுடைய அரசியல் பயணத்தின் தொடக்கப் புள்ளியாகக் கடந்த பிப்ரவரி மாதம் கட்சியின் பெயரை அறிவித்தேன் . அன்றைய நாளிலிருந்தே ஒரு குறிப்பிட்ட நாளுக்காக காத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்கு நல்லா தெரியும்.
விஜய் பேச்சு
அது தமிழக வெற்றி வெற்றிக் கழக கட்சியின் மாநாட்டு தான் . அதற்கான தேதியை விரைவில் அறிவிப்பேன்.இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் , இது வரைக்கும் நமக்காக உழைத்தோம் .
இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டிற்காகவும் தமிழ்நாட்டு மக்களுக்காகவும் உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார் .
மேலும் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் வரலாற்றுக் குறிப்பு உள்ளது . இதற்கான விளக்கத்தை முதல் மாநாட்டில் அறிவிப்பதாகக் கூறினார்.