நாட்டுக்கே ராஜானாலும் எனக்கு பிள்ளை; இதுவரை நான் ஒரு CM..இனி PM - விஜய்யின் தாயார்!
தவெக கொடி அறிமுக விழாவில் விஜய்யின் தாயார் சோபா நெகிழ்ச்சி உரையாற்றினார்.
விஜய்யின் தாயார்
மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கட்சியைத் தொடங்கிய போதிலும், 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தங்கள் இலக்கு என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் கட்சியின் கொடி, சின்னம் குறித்து தெரிவிக்காமல் இருந்த நிலையில்,
இன்று காலை அதன் அறிமுக விழா நடைபெற்றது. சென்னை பனையூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் கட்சிக்கொடி மற்றும் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கொடியின் மையத்தில் மஞ்சளும்,
இனி PM..
மேலும் கீழும் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. அத்துடன் கொடியின் மையத்தில் இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலரும் அமைந்து இருக்கிறது. மேலும் தமிழக வெற்றிக் கழக பாடலையும் விஜய் அறிமுகப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அவரது தந்தை சந்திரசேகர் மற்றும் தாயார் சோபா ஆகியோர் வருகை புரிந்தனர்.இந்நிலையில் தனது மகனின் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் அம்மா சோபா. “இப்போ போல எப்போதும் உண்மையா இரு விஜய்.
நாட்டுக்கே ராஜானாலும் எனக்கு பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று, பெண்ணியம் காப்பாற்று, புரட்சிகர திட்டங்கள் தீட்டு. வானில் பறக்கும் உன் கொடி உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் ஒரு CM (Celebrity Mother) இனி நானும் ஒரு PM (Proud Mother)” என்றார்.