ஒருவழியாக வெளியே தலைகாட்டிய புஸ்ஸி ஆனந்த் - முக்கிய பொறுப்பு கொடுத்த விஜய்!
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார்.
புஸ்ஸி ஆனந்த்
கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், இணைச்செயலர் சி.டி. நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் மதியழகன் கைது செய்யப்பட்டார். புஸ்ஸி ஆனந்தும், சி.டி. நிர்மல் குமாரும் கரூர் சம்பவத்துக்கு பிறகு தலைமறைவாக இருந்து வந்தனர். இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
முக்கிய பொறுப்பு
இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றிய நிலையில், புஸ்ஸி ஆனந்தும், சி.டி. நிர்மல் குமாரும் 16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தனர். இருவரும் தவெக தலைவர் விஜய்யை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளனர்.
குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் கரூர் செல்வதற்காக வாகன ஏற்பாடு உள்ளிட்ட பணிகளை செய்வதற்காக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைத்து விஜய் உத்தரவிட்டுள்ளார்.