சீமான் ஏன் பதறாரு; கரூரில் பொய் கையெழுத்து வாங்குனது யாரு? விளாசிய அண்ணாமலை!
கரூரில் பொய் கையெழுத்து வாங்கியது யார் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பொய் கையெழுத்து
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆஜராகினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் 41 குடும்பத்தினர். ஆனால், அவர்களுக்கு அதில் தெரியாமல் இரண்டு நபர்களிடம் பொய் சொல்லி கையெழுத்து வாங்கி அவர்களையும் இந்த வழக்கில் மனுதாரர்களாக சேர்த்திருக்கின்றனர்.
அண்ணாமலை கேள்வி
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து அந்த இரண்டு பேரிடம் பொய் சொல்லி யார் கையெழுத்து வாங்கினார்கள்.
அவர்களை யார் தவறாக வழிநடத்தியது என்று விசாரணை மேற்கொள்ள வேண்டும். கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிப்பது மாநில தன்னாட்சிக்கு எதிராக இருக்கிறது என்று ஏன் சீமான் பதற்றப்படுகிறார் என்று தெரியவில்லை.
எங்களைப் பொருத்தவரை கரூரில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.